உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையை மீளாய்வு செய்வதற்காக மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அரச சேவை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த குழுவின் தலைவராக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் முன்னாள் செயலாளர் மற்றும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.கே.கே ரணவக்க நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
அத்துடன் 3 மாதத்துக்குள் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment