கொரோனா தொற்று காரணமாக இறந்த சடலங்களை தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய
அனுமதி வழங்கியமை எவரினதும் வேண்டுகோளுக்கு இனங்க இல்லை என்று இராஜாங்க
அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்
பிரதமர் இம்ராம் கானின் இலங்கை விஜயத்திற்கு பின்னரே இதற்கான அனுமதி
வழங்கப்பட்டதாக பரவி வரும் வதந்தியில் எந்தவொரு உண்மையும் இல்லை எனவும்
அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, தடுப்பூசி வழங்கப்படுவதினால் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதில் எந்தவித பாதிப்பும் இல்லை என கூறியதன் காரணமாகவே அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

0 comments:
Post a Comment