கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்ற சுகாதார அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு அமைய இன்று முதலாவது சடலம் ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கோவிட் தொற்று மூலம் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்க அடக்கம் செய்வதற்கு சிபாரிசு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 4 மணி வரை இரண்டு சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை இன்று கோவிட் தொற்று மூலம் மரணித்த ஐந்து முஸ்லிம்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளன. அந்த வகையில் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இருவரின் சடலங்களும், காத்தான்குடியில் உள்ளவர்களின் மூன்று சடலங்களுமாக ஐந்து சடலங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரணித்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன், அனுமதி இல்லாதவர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் ஆகியோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment