• Latest News

    May 05, 2021

    றிசாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்யக்கோரி கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    இதன்போது எமது தலைமையை விடுதலை செய்? ரிஷாத்தை ஏன் கைது செய்தாய் காரணத்தை வெளிப்படுத்து, அரசே றிஸாத்தின் கைது யாரைத் திருப்திப்படுத்த, றிஷாத்தை விடுதலை செய் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு சமூக இடைவெளிகளைப் பேணி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

    புனித நோன்பு காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை கைது செய்துள்ளமை கவலையளிப்பதுடன், எந்தவித முன்னறிவித்தலுமின்றி கைது செய்துள்ளமை மனவேதனையளிப்பதுடன், உடனடியாக நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் விசாரணை மேற்கொண்டு விடுதலை செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுப்பதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப பலர் கலந்து கொண்டுள்ளனர்.  







     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: றிசாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top