கண்டி பேராதனை போதனா வைத்தியசாலையில் சுகாதார பணிக்குழுவின் உதவியாளராக
கடமையாற்றி வந்த 52 வயதான பெண்ணொருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி
உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த வைத்தியசாலை ஊழியரான இந்த பெண் கண்டி தலவத்துஓயா பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் கோவிட் நிமோனியாவே அவரது மரணத்திற்கு காரணம் என்பதை சுகாதார துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காய்ச்சலும் கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அந்த பெண் ஊழியருக்கு கடந்த 21 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழந்தமை இது முதல் முறையாகும்.
0 comments:
Post a Comment