• Latest News

    June 02, 2021

    நீர்கொழும்பு முதல், பாணந்துறை வரை மீன்பிடிக்க வேண்டாம் - கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களம்

     உடனடி அமுலுக்கு வரும்வரையில், பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையிலான கடற்பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென  கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

    தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கும் நிலையில் உள்ளதால், மேற்குறித்தக் கடற் பிரதேசங்களில் தற்காலிகமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, நீர்கொழும்பிலிருந்து வரும் கப்பல் போக்குவரத்துகளுக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை மூழ்கப்போகும் இக்கப்பலில் எண்ணைக் கசிவுகள் எதும் ஏற்படுமாக இருந்தால், அதிலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நீர்கொழும்பு முதல், பாணந்துறை வரை மீன்பிடிக்க வேண்டாம் - கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top