முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த ஹிசாலினியின் சரீரத்துக்கான 2ஆம் பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றினால்
நியமிக்கப்பட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரிகளின் குழுவினால் இன்று காலை
8.30 முதல் மாலை 5.15 வரையில் சுமார் 9 மணித்தியாலம் பிரேத பரிசோதனை
மேற்கொள்ளப்பட்முள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெயியாகியுள்ளன.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது சிறுமியின் சரீரம் முதலில் சீ.ரீ. ஸ்கேன் செய்யப்பட்டு, உள்ளக காயங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டு பின்னர் சரீரத்தின் உடற்கூற்று மாதிரிகள் பெறப்பட்டு பல்வேறு இரசாயன பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பரிசீலனைகள் அனைத்தும் நிறைவடைந்து இறுதி அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில், சிறுமியின் சரீரம் பேராதனை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், 2ஆம் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை இடம்பெறும் என்று காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்கு இலக்காகி டயகம சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடித்து வரும் நிலையில் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நேற்றைய தினம் தோண்டியெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment