அரச சேவையாளர்களை வழமைப்போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம்
வெளியிடப்பட்டுள்ள போதிலும், அது ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என
கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அரச நிறுவனங்கள் நாளை மறுதினம் முதல் வழமைப்போன்று இயங்கவுள்ளன.
பாடசாலைகளை மீள திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர்
நாயகத்தினால் அனுமதி வழங்கப்படாத நிலையில்,குறித்த சுற்றுநிருபம்
ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனுமதிகள் வழங்கப்பட்டால் ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது
தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும் என கல்வி
அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment