பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்
வீரசேகரவின் அமைச்சின் கீழ் காணப்பட்ட இரு துறைகள் நீக்கப்பட்டு ,
பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 27 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இவ்வாறு இரு துறைகள் அமைச்சர் சரத் வீரசேகரவின் அமைச்சிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இதுவரையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பல்நோக்கு மேம்பாட்டு செயலணி ஆகியவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய சரத் வீரசேகர இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு பொறுப்பான அமைச்சராக மாத்திரமே செயற்படுவார்.
0 comments:
Post a Comment