இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,441 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் ஜூன் மாதம் 10 ஆம் திகதியின் பின்னர் மூன்றாவது நாளாகவும் இன்று சனிக்கிழமை நாளொன்றில் இரண்டாயிரத்திற்கும் அதிக கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 6975 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை இந்த எண்ணிக்கை கடந்த வியாழனன்று 2370 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை வெள்ளியன்று 2455 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக இவ்வாறு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு இனங்காணப்பட்டுள்ள போதிலும் , மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டும் , திங்கட்கிழமை முதல் சகல அரச உத்தியோகத்தர்கள் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளதன் மூலமும் சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் நாடு முழுமையாக முடக்கத்திலிருந்து விடுபடுகிறது.
டெல்டா பரவலுடன் இவ்வாறு தளர்வுகள் ஏற்படுகின்றமையானது கொவிட் பரவல் அபாயத்தை மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் சனிக்கிழமை மாலை 7 மணி வரை மாத்திரம் மூன்றாவது நாளாகவும் இரண்டாயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட 2150 தொற்றாளர்களுடன் நாட்டில் இதுவரையில் 308 812 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 277 118 பேர் குணமடைந்துள்ளதோடு , 27 314 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 comments:
Post a Comment