• Latest News

    July 20, 2021

    ஜூட் குமார் இஷாலினி கிடைத்த போதெல்லாம் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

     முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குச் சொந்தமான கொழும்பிலுள்ள வீட்டிலில்  பணிப்பெண்ணாக வேலைசெய்த  ஜூட் குமார் இஷாலினி என்ற சிறுமி, பல மாதங்களாக, நேரம் கிடைக்கும் போதெல்லாம்   பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


    எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்த ஜூட் குமார் இஷாலினியின் நீதிமன்ற வைத்திய  அறிக்கையிலேயே மேற்கண்ட விவரம் வெளியாகியுள்ளது.

    கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரியவின் முன்னிலையில், பொரளை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வைத்திய பரிசோதனை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு தடயவியல் மருத்துவர் எம்.என் ராஹூல் ஹக்வின் கையொப்பத்துடன் இவ்வறிக்கை, பொரளை பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இறந்த சிறுமி, தாக்கப்படவில்லை. சித்திரவதை செய்யப்படவில்லை. எனினும், எரிகாயங்களால், உடல் 72 சதவீதம் எரிந்துள்ளதென அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அச்சிறுமி கர்ப்பமடையாது, நேரம் கிடைத்த போதெல்லாம் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தீயினால் உடலின் மேல் பகுதியில் ஏற்பட்ட எரிகாயங்களில் கிருமிகள் தொற்றியமையால், ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாகவே இச்சிறுமி மரணமடைந்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்த, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த, ஜூட் குமார் இஷாலினிக்கு (வயது 16) நீதி கோரி, அவருடைய சொந்த ஊரான டயகமவில், இன்று (20) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜூட் குமார் இஷாலினி கிடைத்த போதெல்லாம் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top