பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் கீழான கட்டளைகளும், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 2021ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய   ரிஷாத் பதியுதீன் தாணு வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த நிலையில் மரணமான சிறுமி ஹிஷாலினி தொடர்பில் உரையாற்றினார்.

இந்த உரைக்கு அரச தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸடன் பெர்னாண்டோ கடும் எதிர்ப்புத் தெரித்ததுடன் ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருவதனால் ரிஷாத் பதியுதீனின் உரையில் உள்ள பல விடயங்களை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டுமென சபாநாயகரிடம்  வேண்டுகோள் விடுத்தார்.

இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ,ரிஷாத் பதியுதீன் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுவரும் நிலையில் அவர் தன்னிலை விளக்கமொன்றை அளித்துள்ளார். 

எனவே அதனை தயவு செய்து ஹன்சாட்டிலிருந்து நீக்காதீர்கள் என சபாநாயகரிடம் வேண்டுகோள்  விடுத்தார். ஆனால் இருவரின் வேண்டுகோள் தொடர்பிலும் சபாநாயகர் எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை.

Thanks : Virakesari -