• Latest News

    October 14, 2021

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ; ஹிஷாலினி விவகாரம் - ரிஷாத் பிணையில் விடுதலை

     பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று (14.10.2021) பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.


    இதேவேளை அவரது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பிலும் கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாத் பதியுதீன் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

    பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

    இது தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதேவேளை,  அவரது வீட்டில் பணியாற்றிவந்த சிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றிலும் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது அவ்வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    Thanks : Virakesari

     

     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ; ஹிஷாலினி விவகாரம் - ரிஷாத் பிணையில் விடுதலை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top