• Latest News

    January 24, 2022

    2021 மற்றும் 2022 ஆண்டுக்கான மீளாய்வுக்கூட்டம் - கிழக்கின் ஆளுநர் தலைமையில்

     பைஷல் இஸ்மாயில் -

     

    கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழ் உள்ள உள்ளூராட்சித் திணைக்களம், வீடமைப்பு அதிகார சபை, சுற்றுலாப் பணியகம், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, தொழிற்துறை திணைக்களம், கிராம அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றினால் முன்னெடுக்கப்பட்ட மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் பற்றிய மீளாய்வுக்கூட்டம் இன்று (24) கிழக்கு மாகாண முதலமைச்சின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

     

    கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் முதலமைச்சின் கீழுள்ள உள்ளூராட்சித் திணைக்களம், வீடமைப்பு அதிகார சபை, சுற்றுலாப் பணியகம், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, தொழிற்துறை திணைக்களம், கிராம அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றின் தலைவர்கள் பற்கேற்றிருந்தனர்.

     

    குறித்த திணைக்களங்களினால் கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாக மிக விரிவாக கலந்துரையாடப்பட்ட இதேவேளை இவ்வருடம் 2022 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

     

    இதன்போது முதலமைச்சின் செயலக அனைத்து அலுவலகப் பிரிவு நடவடிக்கைகளின் செயற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பார்வையிட்டு அது தொடர்பாக ஆராய்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.  இதன்போது முதலமைச்சின் செயலாளர் (திருமதி) யூ.ஆர்.ஏ.ஜெலீல், பிரதம கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ், நிருவாக உத்தியோகத்தர் முஹம்மட் றியாஸ் உள்ளிட்ட ஆளுநரின் அலுவலக உத்தியோகத்தர்கள் பலர் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2021 மற்றும் 2022 ஆண்டுக்கான மீளாய்வுக்கூட்டம் - கிழக்கின் ஆளுநர் தலைமையில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top