• Latest News

    January 10, 2022

    லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு

     லிட்ரோ எரிவாயு நிறுவனம், அன்றாட தேவைக்கு அதிகமாக எரிவாயு நிரப்பி விநியோகம் செய்து வருவதாகவும் உள்நாட்டு மற்றும் வர்த்தக சந்தை தேவைகளுக்கு ஏற்ற எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது.


    அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

    நிறுவனம் கடந்த இரண்டு நாட்களில் 220,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வழங்கியுள்ளதுடன், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 90,000-100,000 சிலிண்டர்களை வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

    கூடுதல் எரிவாயு சிலிண்டர்களுக்கான நுகர்வோரின் தேவை ஒரு பெரிய தேவையை உருவாக்கியுள்ளது எனவும், நுகர்வோர் தினசரி தேவைகளுக்கு மட்டுமே நியாயமான விலையில் எரிவாயுவை கொள்வனவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top