• Latest News

    January 29, 2022

    காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை வைத்து அரசியல் செய்கின்றார்கள் - நீதி அமைச்சர் அலி சப்ரி

    காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை வைத்து சிலர் அரசியல் செய்கின்றார்கள் நாங்கள் அரசியல் செய்வதற்காக வரவில்லை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவே வந்துள்ளோம் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.


    நீதி அமைச்சின் ஏற்பாட்டில் நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை நேற்று யாழ்.மத்திய கல்லூரில் நடைபெற்று பின்னர் ஊடகவியலாளர்களினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்கள் மேற்கொண்டு வருவது தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

    நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல் திட்டம் வடக்கிற்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் உரியது நான் அமைச்சுப் பொறுப்பு எடுத்த பின் வடக்கில் நீண்டகாலமாகவே பல பிரச்சினை இருப்பதனால் முதலில் வடக்கில் எமது நடமாடும் சேவை ஆரம்பித்துள்ளோம்.

    நாங்கள் மக்களுக்குள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவேதான் எமது அமைச்சின் கீழ் உள்ள பல சேவைகளை இங்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள்.

    இந்தப் பிரச்சினை பதின்மூன்று வருட காலமாக இருக்கின்றது. அவர்கள் பல தரப்பட்ட போராட்டங்களை செய்து வருகின்றார்கள் ஆனால் இதற்கு ஒரு தீர்வு கொடுக்கவேண்டும் இவர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றார்கள் இவர்களுக்கு பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது நாங்கள் தீர்வு கொடுப்பதற்காகவே நேரில் வந்தோம்.

    முல்லைத்தீவில் நாங்கள் ஐவருடன் கலந்துரையாடினோம். காணாமல் போனவர்களை திருப்பித் தரவேண்டும் என்றால் எங்களால் அது இயலாது இதனால் தான் அவர்களுடன் நேரில் கலந்துரையாடி என்ன செய்யவேண்டும் என்ன தேவை எவ்வாறு அதனைத் தீர்த்து வைக்கலாம் என்பதை கேட்டு அதனைச் செய்ய முயற்சிக்கின்றோம்.

    இதுவரைக்கும் காணாமல் போனவர்கள் ஆர்ப்பாட்டத்தை மட்டும் தான் செய்து வருகின்றார்கள் இவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நேரில் வருகை தந்துள்ளோம்

    கிளிநொச்‌சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா இடங்களுக்கு போயுள்ளோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள் அது அவர்களின் ஐனநாயக உரிமை ஆனால் இத்தகைய ஆர்ப்பாட்டம் செய்வதால் அதற்குகத் தீர்வு காணமுடியுமா? காணாமல்போனேரை வைத்து அரசியல் செய்கின்றார்கள் இத்தகைய அரசியல் செய்து பாராளுமன்றத்திற்று வரலாம் ஆனால் அவர்களுக்கு முடிவு காண்பது எவ்வாறு என்பதை யார் யோசிக்கின்றார்கள்.

    பதின்மூன்று வருட காலமாக இந்தப் பிரச்சினையை இவ்வாறே வைத்துக் கொள்வதா நாங்கள் இங்கு நேரில் வந்தது அரசியல் செய்வதற்காக அல்ல பாதிக்கப்பட்ட மக்களின் காலடிக்கு வந்து பிரச்சினையை தீர்ப்பதற்காகவே வந்துள்ளோம் நாங்கள் வரும் இடங்களில் ஆர்ப்பாட்டத்தை செய்கின்றார்கள். அவர்களை எங்களுடன் கலந்துரையாட வருமாறு அழைக்கும் போது அவர்கள் வர மறுக்கின்றார்கள் தொடர்ந்தும் அவர் போராடுகின்றார்கள் என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை வைத்து அரசியல் செய்கின்றார்கள் - நீதி அமைச்சர் அலி சப்ரி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top