மின்சார துறையினர் பல ஆண்டுகளாக மாஃபியா ஒன்று செயற்பட்டு வருவதாகவும் மின்சார பிரச்சினை என்பது திடீரென வந்த பிரச்சினையல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
மின்சார துறையின் தொழிற்நுட்ப பிரிவுகளில் பல ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாத துரதிஷ்டம் காரணமாகவே மக்கள் இருளில் இருக்க நேரிட்டுள்ளது.
மின்சார நெருக்கடி இல்லாத காலத்தில் தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரத்தை பெற பில்லியன் கணக்கில் பணம் செலவிடப்படுவது நாட்டு மக்களுக்கு தெரியாது.
நீண்டகாலமாக தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரத்தை பெற பெருந்தொகையான பணம் செலவிடப்பட்டு வருகிறது. இருந்து வந்த பிரச்சினைகள் ஒன்றாக சேர்ந்து மோசமான நிலைமைக்கு வந்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி, நிலக்கரி பிரச்சினை, பொருளாதார நெருக்கடியுடன் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
0 comments:
Post a Comment