• Latest News

    January 31, 2022

    கொழும்பு, பதுளை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆபத்துள்ள பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    நாட்டின் 12 மாவட்டங்களின்  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள  81 பிரதேசங்கள்  அதிக ஆபத்துள்ள  டெங்கு வலயங்களாக  அடையாளம் காணப்பட்டுள்ளன.

    இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, பதுளை, யாழ்ப்பாணம், காலி, கண்டி, கேகாலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு இதுவரை 7,000 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் மற்றும் இரண்டு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. 

    கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

    டிசம்பரில் பெய்த மழையால் டெங்கு கொசுப்புழுக்களின் அடர்த்தி அதிகரித்திருப்பதும்   பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பு, பதுளை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆபத்துள்ள பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top