நிந்தவூர் கடற் பிரதேசத்தில் நேற்று முன் தினம் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் தோணி கடலில் கைவிடப்பட்டுள்ளது. தற்போது குறித்த தோணி சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்பால் தோணியை மீட்டு கரைக்கு கொண்டு வருவதற்கு முடியாத கையறு நிலையில் மீனவர் காணப்படுகின்றார்.
கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பே தோணி சேதமடைந்து கடலில் கைவிடுவதற்கு காரணமென்று தெரிவிக்கின்றார்.
இவர் தோணியை கடலில் கைவிட்டு உயிர் தப்பிக் கரைக்கு வந்துள்ளார். இதே வேளை குறித்த தோணியுடன் அதன் வலைகளும் கடலில் நீரில் மூழ்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துக் குறித்து மீன்பிடி இலாகா மற்றும் பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மீனவர் தனது தோணியை மீட்டும் தருமாறு மீன்பிடி இலாகா, பொலிஸார், கடற்படையினர் மற்றும் அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றார்.
நாளாந்தம் ஜீவியம் நடத்தும் தோணி கடலில் மூழ்கியுள்ளமை அவரது வாழ்வாதாரத்தின் மீது விழுந்த மிகப் பெரிய அடியாகும். ஆதலால், சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஏழை மீனவருக்கு உதவுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம்.
0 comments:
Post a Comment