ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் கதிரையில் நாங்கள் அமர்த்தவில்லை. மொட்டுக் கட்சிக்கும் அதில் சம்பந்தமில்லை. போராட்டக்காரர்களே அதனைச் செய்தனர்.
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,"
ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக்கியது மொட்டுக் கட்சியினர் அல்லர். போராட்டக்காரர்களே அவரைப் பிரதமராக்கினார்கள். அவர்கள்தான் மகிந்த பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும், எதிர்க்கட்சியிலிருந்து ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் கோரினார்கள்.
நாங்கள் மகிழ்ந்தவே பிரதமராக இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்தோம். மகிழ்ந்தவை தவிர வேறு எவரையும் பிரதமராக நியமிப்பதற்கு நாங்கள் விருப்பமில்லை என்று உறுதியாகக் கூறினோம்.ஆ
ஆனால், கோட்டபாய அவரது விருப்பத்தின்படி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார். மஹிந்தவுக்கு மக்கள் ஆணை இல்லை. அவரைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்குங்கள் என்று கோட்டாவுக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.
அதனால்தான் அவர் ரணிலைப் பிரதமராக நியமித்தார். அவர் பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கும் பின்னர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமைக்கும் எங்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை.
பின்னர் பாராளுமன்றின் ஊடாக ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை வந்தபோது அப்போதைய வேட்பாளர்களை ஆராய்ந்து பார்த்து ரணிலை ஜனாதிபதியாக்குவதற்கு நாம் முடிவெடுத்தோம்

0 comments:
Post a Comment