வானியலில் அரிய நிகழ்வான முழு சூரியகிரகணம் ஆஸ்திரேலியாவில் காண முடிந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரியனை சந்திரன் மறைப்பதால் சூரியகிரகணம் நிகழ்கிறது. சந்திரனால் சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டு முழு சூரிய கிரகணமாக தோன்றி பின்னர் வளைய கிரகணமாக தோன்றுவதால் நிங்களோ ஹைபிரிட் சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த முழு சூரியகிரகணம் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்ளிட்ட சில நாடுகளில் காண முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் எக்ஸ்மவுத்தின் தெற்கு பகுதியில் முழு சூரியகிரகணம் அந்நாட்டு நேரப்படி காலை 7.04 மணி முதல் மதியம் 12.29 மணி நிகழ்ந்துள்ளது. தென் கிழக்கு ஆசியா இந்திய பெருங்கடல் பகுதி, அண்டார்டிகாவில் சசூரியகிரகணம் குறைந்தபட்சமாக பார்க்கமுடிந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.இந்தியாவில் முழு சூரியகிரகணத்தை பார்க்க முடியாவிட்டாலும் பலரும் சூரிய கிரகணத்தை சமூக வலைத்தளங்களில் நேரலையாக பார்த்து ரசித்தனர்.
0 comments:
Post a Comment