• Latest News

    April 20, 2023

    புனித ரமழானை முன்னிட்டு கல்முனை ரஹ்மத்_பவுண்டேஷன் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

    கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பானது அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

    இதற்கமைய கல்முனை பிராந்தியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட பயணாளர்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (18) ரஹ்மத் பவுண்டேஷன் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

    ரஹ்மத் பவுண்டேஷனுடன் YWMA மற்றும் CSMWA பேரவையும் இணைந்து செயற்பட்ட இத்திட்டமானது மறைந்த மாமனிதர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வர்த்தக வானிபத்துறை அமைச்சருமாகிய ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் அன்பு மனைவியும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அன்புத் தாயாருமான சுஹாறா மன்சூர் அவர்களினால் ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிகாட்டலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

    இந்நிகழ்வில் பவுண்டேஷன் உறுப்பினர்களுடன் குறித்த பயனாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.











    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புனித ரமழானை முன்னிட்டு கல்முனை ரஹ்மத்_பவுண்டேஷன் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top