• Latest News

    June 27, 2023

    உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : சட்ட மாஅதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் தாக்கல் செய்த ஆட்சேபனைகள் மனு உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பு!

    2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை  மனுக்களை நிராகரிக்குமாறு கோரி சட்ட மா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர்  தாக்கல் செய்த பூர்வாங்க ஆட்சேபனைகள் இன்று செவ்வாய்க்கிழமை (27)  உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டன.

    2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்பதை உறுதிப்படுத்துமாறு நீதிமன்ற உத்தரவை கோரி இரண்டு  மனுக்களும் கோரியிருந்தன.

    புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    தேசிய மக்கள் சக்தி  மற்றும்  பெப்ரல்  ஆகியவை இது தொடர்பில்  இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : சட்ட மாஅதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் தாக்கல் செய்த ஆட்சேபனைகள் மனு உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top