• Latest News

    June 06, 2023

    சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு..!

     யூ.கே.காலித்தீன் -

    நாட்டில் டெங்கு நோய்த் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுருத்தலுக்கமைவாக, டெங்கு கட்டுப்பாட்டு வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (06) சாய்ந்தமருதில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.


    மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில் காலை 7.00 மணி தொடக்கம் மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசங்களில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான இடங்களை அடையாளம் காணப்பட்டு பல இடங்களில் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

    சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின்  சுற்றுச் சூழல் பிரிவு, மாநகர சுகாதாரப் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.எம்.இஸ்ஹாக், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோரின் பங்கெடுப்புடன் மாநகர திண்மக்கழிவு முகாமைத்துவ மேற்பார்வையாளர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

    இவ்வேலைத் திட்டத்திற்கு பிரதேச சுகாதார வைத்திய பணிமனைகள், பொலிஸ் உள்ளிட்ட சில அரச திணைக்களங்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தமை விஷேட அம்சமாகும்.
     
    விளம்பரம் - Advertisiment 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு..! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top