• Latest News

    July 04, 2023

    அம்பாரையில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

    அம்பாறை - பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள 3 வெவ்வேறு பிரதேசத்தில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த கைது சம்பவம் இன்றைய தினம் (07.04.2023) பதிவாகியுள்ளது.

    பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொத்துவில் நகர பகுதியில் 26 வயதுடைய நபர் ஒருவரும் சியம்பலாண்டுவ பகுதியிச் சேர்ந்த 21 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது சம்பவத்தின் போது இருவரிடமும் மொத்தமாக 550 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

    இதேவேளை அறுகம்பை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து உல்லை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாரையில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top