• Latest News

    September 27, 2023

    பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

    பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை (26) அலரிமாளிகையில் இடம்பெற்றது.

    இச்சந்திப்பில் அனைத்து மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய மாகாணங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் தினேஸ் குணவர்தனவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் எடுத்துரைத்தார். 

    கிழக்கு மாகாணத்தில் பல வருட  காலமாக பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்த நியமனங்கள் வழங்கப்படாத நிலையில்  கணிசமானவர்கள் பணிபுரிகின்றனர் எனவும், இவர்களை நிரந்தரமாக்குவதற்கான வயதையும் தாண்டிய நிலையில் பலர் உள்ளனர் எனவும், நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும்  பிரதரிடம் ஆளுநர் வலியுறுத்தினார். 

    ஆளுநரின் கோரிக்கையை ஏற்ற பிரதமர்,பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை அங்கீகாரம்  பெற  தேவையான  நடவடிக்கைகளை எடுப்பதாக  உறுதியளித்தார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top