![]()
இஸ்ரேலின் ஆளில்லா விமானமொன்றை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தைய மோதல்களில் முதல்தடவையாக ஹெஸ்புல்லா அமைப்புஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியுள்ளதாக உரிமை கோரியுள்ளது.
தென்லெபனானின் கியாமில் இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.சுட்டுவீழ்த்தப்பட்ட ஆளில்லாவிமானம் இஸ்ரேலிற்குள் விழுந்தது எனவும் ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலுடனான மோதல்களில் தனது அமைப்பை சேர்ந்த 46 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment