• Latest News

    October 31, 2023

    காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்வதை உலகம் ஏற்றுக்கொள்ளாது -அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்


    காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்வதை  உலகம் ஏற்றுக்கொள்ளாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் தனது நண்பர்களை செவிமடுக்க வேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இரண்டு தரப்பிலும் பொது மக்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஏபிசி ரேடியோவிற்கு இதனை தெரிவித்துள்ள பெனி வொங் இது பயங்கரமான சோகமான மோதல் உயிர் இழப்பை பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

    இரண்டு பக்கத்திலும் பொதுமக்கள் கடும் வேதனையில் உள்ளதை நாங்கள் பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ள அவர் ஹமாஸ் பணயக்கைதிகளாக இஸ்ரேலியர்களை இன்னமும் பிடித்துவைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    நான் என்ன தெரிவிக்கின்றேன் என்றால் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என இஸ்ரேலின் நண்பர்கள் வலியுறுத்தும் போது அதனை இஸ்ரேல் செவிமடுப்பது அவசியம் என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்வதை உலகம் ஏற்றுக்கொள்ளாது -அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top