தீவிரவாத செயல்கள், பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு, அந்நாட்டில் தங்கியுள்ள 17 லட்சம் ஆப்கான் அகதிகளை வெளியேற்றும் வேலையில் இறங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கிருந்து ஏராளமானோர் அகதிகளாக அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானில் உரிய அனுமதியில்லாமல் தங்கியுள்ள 17 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்களுக்கு, ஆப்கானில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இதனால் பாகிஸ்தான் – ஆப்கான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதுவரை 2 லட்சம் ஆப்கான் மக்கள் தங்களது நாட்டுக்கு திரும்பியுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய மக்களில் 80 சதவீதம் பேர் தாங்கள் கைது செய்யப்படலாம் என்று அச்சத்தால் வெளியேறி வருகின்றனர். சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், ஆப்கான் அகதிகளால் தீவிரவாத மற்றும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் இருந்து ஆப்கான் விரட்டப்படும் அகதிகள், தங்களது நாட்டுக்கு மீண்டும் திரும்பினால் கைது, தடுப்புக்காவல், சித்திரவதை ெகாடுமைகளை அனுபவிக்க நேரிடும் என்று ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தாசனி கூறினார்.

0 comments:
Post a Comment