
ஹமாசுடனான மோதலில் 11 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் இராணுவம் 11 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ள நிலையிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் மிகவும் கடினமான யுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்,இது மிகவும் கடினமான யுத்தம் நாங்கள் மிக முக்கியமான விடயங்களை சாதித்துள்ளோம் ஆனால் துயரமான இழப்புகளை சந்தித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களின் ஒவ்வொரு படைவீரரும் ஒரு முழு உலகம் என்பது எங்களிற்கு தெரியும் முழு இஸ்ரேலும் உங்களை தழுவிக்கொள்கின்றது எங்கள் நோக்கம் நிறைவேறும் வரை நாங்கள் தொடர்வோம் என மக்களிற்கு நான் உறுதியளிக்கின்றேன் - வெற்றி கிடைக்கும் வரை தொடருவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment