தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்றுமாறு கோரி கிரிக்கெட் நிறுவனம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை மேற் கொண்டிருந்தனர். இறுதியாக இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்திருந்தது.
இதன் காரணமாக பல்வேறு விமர்சனங்கள் இலங்கை கிரிக்கெட் சபை மீது முன் வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்பேதைய நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது களத்திற்கு வந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டோரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதேவேளை,
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கை கிரிக்கெட் நிறுவன (SLC)
செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை இன்று
சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment