• Latest News

    December 29, 2023

    இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்

     இந்தியப் பெருங்கடலில் இன்று மாலைத்தீவுக்கு அருகில் மீண்டும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

    குறித்த நிலநடுக்கமானது இன்று (29) காலை 8 மணியளவில் பதிவாகியுள்ளது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேனா தெரிவித்தார்.

    முன்னதாக, ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    எனினும், நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கங்கள் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுக்கு அருகில் பதிவாகியுள்ளன. கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top