• Latest News

    December 29, 2023

    அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்


    கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

    வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.
    அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

    இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் மேற்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top