அம்பாரை மாவட்டத்தில் பெய்து வருகின்ற கன மழை காரணமாகவும், அம்பாரை சேனநாயக்க சமூத்திரத்தின் ஐந்து வான் கதவுகளின் ஊடாக நேற்று 4.5 அடி அளவிலான திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஐந்து வான் கதவுகளின் ஊடாக 5.5 அடி அளவிலான நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் அம்பாரை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பொல்வத்த, பகலலந்த, மற்றும் இறக்காமம் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாயந்தமருது, கல்முனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள தாழ்நிலப் பிரதேசங்கள் ஆபத்தானவையாக அடையாளங் காணப்பட்டுள்ளதாக அம்பாரை விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் களியோடை ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் அண்மித்த பகுதிகளில் உள்ள சுமார் 70 நாட்களை கடந்துள்ள சுமார் 70 ஏக்கருக்கும் அதிகமான வேளாண்மைகள் நீரில் மூழ்கியுள்ளன.
இன்று மாலை 5 மணிக்குப் பின்னர் களியோடை ஆற்றில் மிகக் கூடுதலான வெள்ள
நீர் கடலை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இதே வேளை, ஆற்றின் இரு
மருங்கிலும் உள்ள வயல்கள் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.
இதே வேளை, களியோடை ஆற்றின் வீரையடி அணைக்கட்டின் 10 வான் கதவுகளும் சுமார் 08 அடி அளவில் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், அம்பாரை மாவட்டத்தில் பெய்து வருகின்ற கன மழை காரணமாகவும், நிந்தவூர், சாய்ந்தமருது, ஒலுவில், அட்டாளைச்சேனை, பாலமுனை போன்ற இடங்களில் உள்ள தாழ்நிலப் பிரதேசங்கள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.
நிந்தவூர் அரசடிப் பிரதேசத்தில் உள்ள தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அத்தோடு அங்கு காணப்படுகின்ற வீடுகள் பலவும் நீரினால் சூழப்பட்டுள்ளன. அத்தோடு வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.இந்நிலையில் மாவடிப்பள்ளி ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சுமார் 60 நாட்களை கடந்துள்ள சுமார் 50 ஏக்கருக்கும் அதிகமான வேளாண்மைகள் நீர்pல் மூழ்கியுள்ளன.
மாவடிப்பள்ளி ஆற்றின் அணைக்கட்டின் 08 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.










0 comments:
Post a Comment