• Latest News

    January 09, 2024

    கண்ணகி கிராமத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.


     அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்ணகி கிராமத்தில் நேற்றிரவு(08) இரண்டு மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.
    களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒன்று அருகில் உள்ள வீதி ஓரமொன்றில் கைவிடப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளதுடன் EP BDP- 3586 இலக்கமுடைய பல்சர் ரக மோட்டார் சைக்கிள் திருடர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    மழை பெய்துகொண்டிருந்த நிலையில் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களே கொள்ளையிடப்பட்டுள்ளது.
    இருந்த போதிலும் கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிளில் ஒன்று இயங்கமுடியாத நிலையில் கைவிடப்பட்டிருக்கலாம் என தெரிய வருகின்றது.
    திருட்டு தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கண்ணகி கிராமத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top