• Latest News

    March 24, 2024

    நிந்தவூர் சிறுவர் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைக்கு இரண்டாம் கட்டமாக 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு

    நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சிறுவர் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைக்கு இரண்டாம் கட்டமாக ரூபா 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து நிர்மாணப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் ஒப்புதல் வழங்கியுள்ளார். 

    பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின்  அயராத முயற்சியினால் சுகாதார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில்  ரூபா 800 மில்லியன்  செலவில் நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மகப்பேற்று வைத்தியசாலையின் முதற்கட்ட நிர்மாணப்பணிகள் இடம்பெற்றன.

    இந் நிலையில் சுகாதார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்  முன்னெடுத்த  நிர்மாணப்பணிகளை துரித கதியில் முன்னெடுக்க ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி செயலகம் குறித்த விடயத்தினை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தது. அதன் பிரகாரம்  பாராளுமன்ற உறுப்பினர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலை நிர்மாணப்பகுதிக்கு இன்று கள விஜயம் மேற்பார்வை செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ரூபா 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் Dr. P.G மஹிபால ஒப்புதல் அளித்துள்ளதோடு, குறித்த பணிகளை துரித கதியில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    இவ்விஜயத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலைகளில் அத்தியட்சகர்களையும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் சிறுவர் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைக்கு இரண்டாம் கட்டமாக 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top