முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகளில் பலர் சமூகத்திற்கு எதனையும் செய்யாமலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்றாகி விட்டார்கள். தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்றுவதற்காக பணத்தையும், அரிசியையும் வேறு பொருட்களையும் வழங்கி வாக்குகளை கொள்ளையடித்தவர்கள்தான் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள்.
இவர்களை தேர்தல் முடிந்ததன் பின்னர் காண முடியாது. தமக்கு வாக்களித்த மக்களினால் பல கோடிகளை உழைத்துள்ளார்கள். ஆனால், தேர்தலின் பின்னர் மக்கள் பசியோடும், தமது தேவையை பூர்த்தி செய்வதற்குரிய வருமானமின்றியும் கஸ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களை என்னவென்றும் கவனிக்கமாட்டார்கள்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையால் மக்கள் பல கஸ்டங்களுக்கு மத்தியில் வாழந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் ஒரு நாள் பசியைக் கூட போக்குவதற்கு உதவிக்கரம் நீட்டாதவர்களாகவே அம்பாரை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்.
ஆனால், தங்களைப் பற்றி புகழந்து பேசும் விழாக்களுக்கு இலட்சக் கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்பன நடைபெறவுள்ளன. அதற்குரிய ஆயத்தங்களை இப்போதே மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், தேர்தலில் வாக்களிக்கின்ற மக்களில் பலர் ஒரு வேளை உணவை உண்பதற்கு வசதியின்றி பசியோடும், பட்டினியோடும் வாழந்து கொண்டிருப்பதனை நினைத்துக் கூட பார்க்கின்ற மனசு இல்லாதவர்களாக உள்ளார்கள். இவர்களுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வேதனைப்படுகிறார்கள்.
பாராளுமன்றத்தில் பேசுவதுமில்லை. மக்களை பற்றி எண்ணுவதுமில்லை என்றால் அடுத்த தேர்தலில் இவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டுமென்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். பாராளுமன்றத்திற்கு புதியவர்களை அனுப்ப வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
மக்களின் கஸ்டங்களில் பங்கு கொண்டு பல உதவிகளை செய்து கொண்டிருக்கின்ற கிழக்கின் கேடயம் சபீஸை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென்று முடிவு செய்துள்ளதாகவே பேசிக் கொள்கிறார்கள்.. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் புதியவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலாகும். அவாகளில் சபீஸ் முதன்மையானவர் என்பதே அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேச மக்களின் பலரின் அபிப்ராயமாகும்.


0 comments:
Post a Comment