• Latest News

    March 21, 2024

    உயர் நீதிமன்றத்தில் தகாத முறையில் நடந்துகொண்ட சட்டத்தரணியை கைது செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு

     


    உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவரின் தகாத நடத்தையின் காரணமாக அவர் கைது செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், குறித்த சட்டத்தரணியை ஏப்ரல் 3ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேவேளை, இந்த சட்டத்தரணிக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வரை அவருக்கு சட்ட நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டத்தரணி நீதிமன்ற உத்தரவுகளுக்கு புறம்பாக சமர்ப்பணங்களை முன்வைத்ததாகவும் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து, அவரை கைது செய்யுமாறு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அவரை மனநல மருத்துவரிடம் காண்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உயர் நீதிமன்றத்தில் தகாத முறையில் நடந்துகொண்ட சட்டத்தரணியை கைது செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top