• Latest News

    May 25, 2024

    இந்த ஆண்டு அதிதீவிர புயல்கள் பதிவாகலாம் !

    இந்த ஆண்டு அட்லாண்டிக் சூறாவளி பருவத்தில் அதிதீவிர புயல்கள் பதிவாகலாம் என்று அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கணித்துள்ளது. பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


    அதேவேளை அட்லாண்டிக் சூறாவளி பருவம் பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த பருவத்தில் கிட்டத்தட்ட 25 புயல்கள் பதிவாகலாம் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர்.

    லா நினா வானிலை

    அவற்றில், 85 சதவீதம் இயல்பை விட அதிதீவிரமான நிலையில் காணப்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த புயல்களில் சுமார் 7 புயல்கள் 3ம் மட்டம் அல்லது அதற்கும் அதிகமான அதிதீவிர புயலாக வீசும். பூமியின் மேற்பரப்பை குளிர்விக்கும் லா நினா வானிலையால் இந்த நிலை ஏற்படுகிறது. இதனால் எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என கணிக்க முடியாது என அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். 2023 ஆம் ஆண்டில், 20 புயல்கள் பதிவு செய்யப்பட்டன, அவற்றில் 14 அதிதீவிர புயலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்த ஆண்டு அதிதீவிர புயல்கள் பதிவாகலாம் ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top