ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி கட்சியின் தலைமைப் பதவியை ருவன் விஜேவர்தன வழங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணையும் வாய்ப்பு உருவாகலாம் என்று கூறப்படுகிறது.அதேவேளை, கடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு 22,99767 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியிருந்தார்.
இந்நிலையில், அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment