• Latest News

    October 06, 2024

    சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 05ஆவது இடம்


     சிறந்த நாடுகளின் பட்டியலின் தரவரிசையின் படி, இலங்கை 05ஆவது இடத்தை பிடித்துள்ளது.

    CEOWORLD என்ற இதழ் தொகுத்துள்ள வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இவ்வாறு இலங்கை இடம்பிடித்துள்ளது.

    295,000 க்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.  

    இதன்படி, முதலாவது இடத்தில் தாய்லாந்து, இரண்டாவது இடத்தில் கிரீஸ், மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியா மற்றும் நான்காவது இடத்தில் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

    இதேவேளை, ஆயுர்வேத சிகிச்சை, மறக்க முடியாத தொடருந்து பயணங்கள் அல்லது தேயிலைத் தோட்டத்தைப் பார்வையிடுவது என அனைத்து வகையான பயணிகளுக்கும் இலங்கையின் மலைநாடு பரந்த அளவிலான அனுபவங்களை வழங்குகிறது என குறிப்பிட்டுள்ளது.

    பௌத்த விகாரைகளில் கொண்டாடப்படும் போயா சம்பிரதாயத்துடன், கலாசாரம் மற்றும் மரபுகள் நிறைந்த நாடு இலங்கை எனவும் இலங்கையில் ஆரோக்கியமான காலை உணவை அனுபவிக்கவும் வாய்ப்புள்ளதெனவும், நுகர்வில் அதிக ஆர்வமுள்ளவர்களுக்கு இலங்கை ஒரு சிறந்த இடமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அத்துடன், இரத்தினங்கள், தேநீர், கைத்தறி துணிகள், தோல் பொருட்கள், பழங்கால பொருட்கள், நகைகள் மற்றும் மட்பாண்டங்கள் ஆகியன இலங்கையின் சிறப்பாக அமைந்துள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 05ஆவது இடம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top