• Latest News

    October 21, 2024

    புலனாய்வு செய்தியாளர் விருதினை பெற்றுக்கொண்ட பாறுக் ஷிஹான்


    இலங்கையில்  கலை, இலக்கியம், ஊடகத்துறை,சமூகப்பணி என்பவற்றில் சாதனை படைத்த   பல்துறை  ஆளுமைகளைக்  கௌரவிக்கும் Sky Tamil ஊடக அமைப்பின்    விருதுகள் வழங்கி கெளரவிக்கும்  விழா மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு   கடந்த சனிக்கிழமை(19) தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீட அரங்கில் ஸ்கை தமிழ், துணிந்தெழு பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெ.எம். பாஷித்  தலைமையில் இடம்பெற்றது.
     
     தேசிய ,சர்வதேச விருது விழாக்களுக்கு நிகராக  ஏற்பாடு செய்யப்பட்ட இவ் மாபெரும் விருது விழாவில் கடந்த 18 வருடங்களுக்கு மேலாக  ஊடகத்துறையில் செயற்பட்டு வரும்  பாறுக் ஷிஹான் புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான  சிறந்த  புலனாய்வு செய்தியாளர்(investigation journalist ) விருதினை பெற்றுக் கொண்டார்.
     
    கடந்த வருடம் கட்டாரில் நடைபெற்ற இந்த விழா இரண்டாவது தடவையாக இலங்கையில் இம்முறை நடைபெற்றதுடன் இந்த விருது விழாவில் பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டனர். 
     
    இந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகரும், தொழிலதிபருமான புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத், கலை கலாச்சார பீடாதி பேராசிரியர் எம்.எம். பாஸில், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலர் உட்பட நிறைய பிரமுகர்கள் பலரும் கௌரவ, விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புலனாய்வு செய்தியாளர் விருதினை பெற்றுக்கொண்ட பாறுக் ஷிஹான் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top