• Latest News

    October 03, 2024

    டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்புக்கு காரணம் என்ன?

     நாட்டுக்குள் வந்துள்ள அந்நிய செலாவணியின் அதிகரிப்பானது, ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி குறைவுக்கான காரணமாக அமைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். 


    சுற்றுலாத்துறையின் வருமானம் மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் அதிகரித்தமையே இதற்கு பிரதான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த காலங்களில் இலங்கைக்கு வந்த டொலரின் பெறுமதியில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் இருந்து வெளியேறும் டொலரின் அளவில் குறைவு ஏற்பட்டிருந்தது.

    மேலும் தேர்தலுக்கு முன்னர் நாட்டிற்கு வந்த டொலர் மற்றும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே பதிவாகியுள்ளது.ரூபாயுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதியை நிலையான நிலையில் பேணுவது மிகவும் முக்கியமானது.

    ரூபாயின் பெறுமதி உயர்வதும் குறைவதுமாக இருந்தால் அது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். அதன் பெறுமதியை நிலையான மட்டத்தில் வைத்திருக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.15 மாதங்களின் பின்னர் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் மதிப்பு நேற்று முதல் முறையாக 300 ரூபாய் வரம்பிற்கு கீழ் வீழ்ச்சி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்புக்கு காரணம் என்ன? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top