• Latest News

    March 26, 2025

    ஜெமீல் ஞார்கார்த்த வைத்தியசாலைக்கு ஐ.எஸ்.ஓ. 9001 தரச்சான்றிதழ் பெற்ற ஆய்வுகூடம்

    (சஹாப்தீன்)

    கடந்த 40 வருடங்களாக கல்முனையில் இயங்கி வருகின்ற ஜெமீல் ஞார்கார்த்த வைத்தியசாலை மக்களின் சுகாதார நலன் கருதி பல்வேறு சேவைகளை விஸ்தரித்துக் கொண்டு வருகின்றது.

    ஜெமீல் ஞார்கார்த்த வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வு கூடமொன்றுக்கு ஐ.எஸ்.ஓ. -9001:2015 தரச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றுள்ளது. இது இவ்வைத்தியசாலையின் மற்றுமொரு சேவையாகும்.
    நோயாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டுமென்ற பிரதான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்ற இவ்வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் பல்வேறு சமூகப பணிகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
    கல்முனையில் பிரதான வைத்தியசாலையைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்ற ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையானது, சாய்ந்தமருது, சம்மாந்துறை பிரதேசங்களிலும் கிளைகளகை; கொண்டு இயங்கி வருகின்றது.
    சாய்ந்தமருதில் உள்ள மருத்துவ ஆய்வு கூடமொன்றுக்கு ஐ.எஸ்.ஓ. -9001:2015 தரச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றுள்ளது. சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்தில் அண்மையில் நிறுவப்பட்ட ஜே.எம்.எச். டயக்னொஸ்டிக்ஸ்  அன்ட் ஸ்பெசலைஸ்ட் இன்பிரேமரி ஆய்வு மையத்திற்கே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

     இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக பீரோ வெரிட்டாஸ் நிறுவனத்திடமிருந்து இந்த தரச் சான்றிதழை பெற்றுக் கொண்ட ஆய்வுகூடமாக இது திகழ்கின்றது. இது தொடர்பாக அறிவிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
    சுமார் நான்கு தசாப்தகாலமாக கிழக்கிலங்கையில் இயங்கிவருகின்ற டொக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை குழுமத்தின் ஒரு கிளை நிறுவனமான ஜே.எம்.எச். டயக்னொஸ்டிக்ஸ் அன்ட் ஸ்பெசலைஸ்ட் இன்பிரேமரி ஆய்வு கூடத்தில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தரஆய்வுப் பரிசோதனைகளை தொடர்ந்து இச் சான்றிதழ் வழங்கப்படடுள்ளது.

    நவீன தொழில்நுட்பத்துடனான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேற்படி ஆய்வு கூடத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவ ஆய்வுகூட பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்றும், அவற்றுள் சுமார் நூறு பரிசோதனைகள் இப் பிராந்தியத்தில் அரிதாக கிடைக்கக் கூடியவை என்றும் ஜே.எம்.எச். குழுமத்தின் தலைவர் டொக்டர் றிசான் ஜெமீல் தெரிவித்தார்.

    இந்த ஆய்வு கூடத்தை மக்கள் மயப்படுத்தும் நிகழ்ச்சி அண்மையில் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜெமீல் ஞார்கார்த்த வைத்தியசாலைக்கு ஐ.எஸ்.ஓ. 9001 தரச்சான்றிதழ் பெற்ற ஆய்வுகூடம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top