• Latest News

    March 26, 2025

    கதீப் முஅத்தீன்மார்களுக்கான உலர் உணவு பொதி வழங்கி வைப்பு

    யூ.கே. காலித்தீன்-

    ஸீறா பவுண்டேசன் ஸ்ரீலங்கா அமைப்பினால் 12வது வருடமாக அமைப்பின் சர்வதேச மற்றும் உள்ளூர் நல்லுலங்களின் நிதியுதவியின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் நிகழ்வானது தொடர்ந்தேச்சியாக ஒரு தசாப்தத்தினை தாண்டி இம்முறையும் தனது சேவைகளை இறைவனின் திருப்பொருத்ததினை வேண்டி உதவி செய்து வருகின்றனர்.

    பொருளாதார நெருக்கடி காரணமாக இக்கால கட்டத்தில் வருமானம் எதுவுமின்றி குறிப்பிட்ட நிதிக்குள் இறைவனின் ஆசின் பிரகாரம் சாய்ந்தமருது மாளிகைக்காடு பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின் மற்றும் இமாம்களுக்கு (25) ஆம் திகதியன்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெருமதி வாய்ந்த ஒரு தொகை உலர் உணவு பொதி  வழங்கி வைக்கப்பட்டது.
    இந்நிகழ்வானது அமைப்பின் ஸ்தாபகரும், ஒருங்கிணைப்பாளருமான  யூ.கே. காலித்தீனின் தலைமையிலும், அமைப்பின் பணிப்பாளர் சபையின் சிரேஷ்ட தலைவைர்களில் ஒருவரும், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மிய்யத்துல் உலமா சபையின் செயலாளருமான அல் ஹாபில் அஷ்ஷேய்க் மௌலவி நப்றாஸ் ஹனிபா (ரஹ்மானி) அவர்களின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்றது.
    நிகழ்வில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் மௌலவி எம்.எம். சலீம் (ஷர்க்கி), சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபையின் இடைக்கால சபைத்தலைவர் வைத்தியர் சனுஸ் காரியப்பர், சாய்ந்தமருது மாளிகைக்காடு கதீப் முஅத்தீன் சம்மேளனத்தின தலைவர் தலைவர்  அஷ்ஷெய்க்  எம்.ஐ. ஆதம்பாவா (ரசாதி)  கதீப் முஅத்தீன் சம்மேளத்தின்   உறுப்பினர்கள், ஸீறா பவுன்டேசன் ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
    உலமா சபையின் சிரேஷ்ட உறுப்பினறும் மாவடிப்பள்ளி சஹ்தி அரபிக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேய்க் மௌலவி ஐ.எம். ரஹ்பி (ஹிழ்ரி) அவர்களினால் காலத்தின் தேவையும், முஅத்தீன் கத்தீப் மார்களின் முன்மாதிரியும் எனும் தொனிப் பொருளில் விஷேட சொற்பொழிவினை நிகழ்த்தினார்.
    இறுதியில் கதிப் முஅத்தின் மார்களுக்கு பொதிகளை வழங்கி வைத்ததேடு, ஸீறா பவுண்டேசன் ஸ்ரீலங்கா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் யூ.கே.காலித்தினின் நன்றி உரையுடனும், கதீப் முஅத்தீன் சம்மேளனத்தின தலைவர் அஷ்ஷேய்க்  எம்.ஐ. ஆதம்பாவா (ரசாதி) அவர்ளினால் உதவி புரிந்தவர்களின் தாய் தந்தையோருக்கும், நாட்டுக்காவும், குறிப்பாக பலஸ்தீன் உம்மத்துக்காவும் உருக்காமான துஆப் பிராத்தனையுடன்; நிகழ்வு முடிவுற்றது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கதீப் முஅத்தீன்மார்களுக்கான உலர் உணவு பொதி வழங்கி வைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top