காசா பகுதி மீதான வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார்.
காசா பகுதியில் உள்ள துருக்கி-பாலஸ்தீன நட்புறவு மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் மிகப்பெரிய விமானத் தாக்குதலை நடத்தியது.
இந்த மருத்துவமனை துருக்கியால் நிர்மாணிக்கப்பட்டு உள்ளூர் அதிகாரிகளால் புற்றுநோய் சிகிச்சை மையமாக இயக்கப்பட்டுள்ளது.காசாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளும் விடுவிக்கப்படும் வரை இஸ்ரேல் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், நவம்பரில் ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம் செய்த பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் லெபனானை குறிவைத்துள்ளது.
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்காவிட்டால் காசா முனையை தங்கள் நாட்டுடன் இணைக்கப் போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
March 23, 2025
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment