• Latest News

    March 23, 2025

    கல்முனை நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய சந்தேக நபர் நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

     


    கல்முனை நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய சந்தேக நபரை வியாழக்கிழமை (20) இரவு  நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

    அம்பாறை மாவட்டம் - நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பளம் பகுதியில் ஆடு திருடிய இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

    சந்தேக நபர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை (13) கல்முனை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். 

    இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தப்பியோடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதன்போது, சந்தேக நபர்கள் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கைதான இருவரிடமும் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது குறித்த சந்தேக நபருக்கு நிலுவையில் ஆடு, மாடு, தங்க நகை உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்துக்கு மேற்பட்ட பிடியாணைகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    குறித்த கைது நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நந்தநாராயணவின் வழிகாட்டுதலில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நஜீம் தலைமையிலான குழுவினரினால் மேற்கொள்ளப்பட்டது.

    இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய சந்தேக நபர் நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top