முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம புதிய விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்தே விசாரணையில் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர் இந்த இரண்டும் ரணில் விக்கிரமசிங்;கவின் பதவிக்காலத்திலேயே இடம்பெற்றன என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி வெளிப்படை தன்மை குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment