ஏ.எல்.எம்.ஷினாஸ், றாஸிக் நபாயிஸ், முஜீப் சத்தார் -
அம்பாறை
மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பெரியநீலாவணை அக்பர்
கிராமத்தில் வீடொன்றில் 26.06.2025 இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்து
காரணமாக குறித்த வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் ஏற்பட்டதும் உடனடியாக செயல்பட்ட அருகில் உள்ள பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரமாக முயற்சி செய்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வீட்டில் இருந்த தளபாடங்கள், மின்சார பொருட்கள் உட்பட அனைத்து உடைமைகளும் தீயில் கருகி சாம்பலாகியது. எனினும் வீட்டிலிருந்து எவருக்கும் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. வீட்டில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments:
Post a Comment