நாட்டில் அனுபவம் மற்றும் பல்துறை சார்ந்தவர்களை நேரடி அரசியலுக்கு நாட்டுக்கு பயனுள்ளதாக இந்தசபைகள் மூலம் செயற்படுத்துவதே நோக்காகும்.
ப்பால் 1978ம் ஆண்டு அரசியலமைப்பு மாற்றத்துடன் இலங்கையில் இந்த இரண்டாவது சபையான கீழ்சபை நீக்கப்பட்டது! இருந்தும் பாராளுமன்ற ஐனநாயகத்தை சிறப்பாக செயற்படுத்த தேசியப்பட்டியல் என்ற முறை அறிமுகமானது.
இதன் மூலம் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படாத 29 நபர்கள் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு பொதுத்தேர்தலில் கிடைக்கின்ற வாக்குகளின் விகிதாசாரத்திற்கு அமைய ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அரசியலமைப்பின் 99ம் பிரிவின்படி: கட்சி அல்லது சுயேட்சை குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட மற்றும் தேர்தலில் போட்டியிட்டு தோல்விகண்டவர்கள் தேசியப்பட்டியலுக்கு் நியமிக்க முடியும்! பிரிவு 99(A) பிரகாரம் மேற்கூறப்பட்டவர்களைத் தவிர் எவரையும் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்க முடியாது.
2004ம் ஆண்டுவரை இந்ததேசியப்பட்டியல் மூலம் பல்துறை சார்ந்த்புத்திஜீவகள் பலகட்சிகள் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமனம் பெற்றனர்.
ஆனாலும் காலப்போக்கில் இந்த நியமனம் முற்றிலும் அரசியல்மயமானது-சமூகவிரோத தொழிலை செய்பவர்கள் மற்றும் சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டியவர்களின் உரித்தானது.
இதனால் நாட்டின் சட்டம் மற்றும் பாராளுமன்ற ஐனநாயகம் வேடிக்கையானது! மக்களுக்கான சபை கோமாளிகளும் கூத்தாடிகளுமர சண்டைபோடும் சந்தையாக மாறியது.
தற்போது இந்த தேசியப் பட்டியல் சந்தையில் ஏலம்போகும் பொருளாக மாறிவிட்டது. பணம் உள்ளவனும் கட்டப்பஞ்சாயத்து நடாத்துபவனுக்கு மட்டுமே சொந்தமான பொருளாக மாறி உள்ளது.
குறிப்பாக அன்வர் இஸ்மாயீல் மரணத்துடன் பசீல் ராஜபக்ஷ பாராளுமன்றம் வந்தது முதல் ரணில் விக்ரமசிங்க கட்நத முறை பாராளுமன்றம் நியமனமானது வரை சட்டம் மௌனித்துவிட்டது.
கடந்தகாலங்களில் இப்படியான பல நியமனங்களுக்கு எதிராக பலவழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படலட போதும் எதுவும் சாதகமான தீர்ப்பை வழங்கவில்லை.
குறிப்பாக 2004ம் ஆண்டு “தேர்தல் வன்முறைக்கு எதிரான காப்பகம் “UPFA அரசாங்கத்தால் தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாத ரட்னசிரி விக்ரமநாயக்கா மற்றும் விஜயதாஷ ராஷபக்க ஆகிய இருவரின் பாராளுமன்ற நியமனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது.
24:01:2020 “மாற்றுக் கொள்கைக்காக நிலையம்” டாக்டர் ஜயம்பதி விக்ரமரட்னவின் பதவி விலகளுக்கு பின்னர் தேசியப்பட்டியல் உறுப்பினராக UNP நியமித்த சமனர ரட்னபிரியவின் நியமனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது.
ஆனாலும் அரசியலமைப்பின் : However, Sri Lankan political parties have all along been using Section 64 (5) of the Parliament Elections Act No 1 of 1981, which authorizes them to appoint “any member” of the political party to fill such a vacancy in parliament.
இந்த்64(5)பிரிவின் மூலம் அரசியலமைப்பின் 99(A)வின் சட்டத்தன்மை இல்லாது செய்யப்பட்டுள்ளது! இருந்தாலும் இந்த தேசியப் பட்டியல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் சட்டவரம்புக்கு அமைவாக ஒரு பொருள்கோடலைச் செய்துள்ளது!
“ அரசியலமைப்பு உறுப்புரிமை 99&99(A) பிரிவின்படி கட்சி அல்லது சுயேட்சைக் குழுக்கள் தங்களது முதல் நியமனத்தை கட்டாயம் தேசியப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட நபர்கள் அல்லது தேர்தலில் போட்டியிட்டவர்ஙளை் மட்டுமே நியமிக்க வேண்டும்! அந்த தேசியப் பட்டியல் உறுப்பினர் இராஜினாமாச்்செய்தால் ஏற்படும் வெற்றிடத்திற்கு
அரசியலமைப்பு உறுப்புரிமை 64(5) ன் பிரகாரம் கட்சியின் செயலாளரால் தேர்தல் ஆணையாளருக்கு பெயர்குறிப்பிடப்படும் எவரையும் நியமிக்கலாம்.
இதன்படி முதல் தேசியப்பட்டியில் பெயர் குறிப்பிடப்பட்ட அன்வர் இஸ்மாயீல், அவரது மரணத்துடன் பெயர் குறிப்பிடப்படாத பசீல் நியமனம்.
தேசியப்பட்டியல் பெயர் குறிப்பிடப்பட்ட நபர் UNP நியமனம் செய்தது. அவர் இராஜினாமா செய்த பின்னர் பெயர் குறிப்பிடப்படாத ரணில் நியமிக்கப்பட்டார்.
ஆகவே தற்போது ACMC மற்றும் SLMC இரண்டு கட்சிகளும் தங்களுக்குரிய தேசியப்பட்டியல்்முதல்தர சுற்றில் நியமனத்தை பட்டியலில் பெயர்குறிப்பிட்ட/ தேர்தலில் போட்டியிட்டவர்களை நியமித்து விட்டனர். இதன் பின்னரான எந்த நியமனத்திற்கும் கட்சி விரும்பிய நபரை நியமிக்க முடியும்!
By:Mr:FAHMY Mohamed
Lawyer & Solicitor(UK)
0 comments:
Post a Comment